கண்ணீர் மை!
July 20, 2013
கல் போல நின்ற என்னில்
கண்ணீர் மட்டும் தாரைதாரையாய்,
என் கண்ணே
எனை விட்டுச் சென்ற பின்னர்!
இணையாக ஒரு துளி
எனதருகே விழும்போது
என் நண்பனும் கண்ணீருடன் எனக்காக,
எத்துனை சோகங்கள்
இனி இருந்தாலும் அழவேண்டாம்
என முடிவெடுத்தேன் அதன் பின்னர்!
இதைக் காதல் தோல்விக்கவிதை என்கிறார்கள்!
இல்லை,
என் பேனாமுனையின் கண்ணீர்த்துளிகள்
மையாகக் காகிதத்தில்!